17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி முருகன் கோவில் அருகே மகிளா காங்கிரஸ் சார்பில் கேஸ் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

உசிலம்பட்டி முருகன் கோவில் அருகே மகிளா காங்கிரஸ் சார்பில் கேஸ் பெட்ரோல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்.

எழுதியவர்: mohan April 1, 2022, 11:05 am

தமிழகம் முழுவதும் பெட்ரோல் டீசல் கேஸ் உள்ளிட்டவை வெகுவாக உயர்ந்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதன் ஒரு பகுதியாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் அருகே தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் தெற்கு மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி பிரவீனா தலைமையில் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட தலைவர் பாண்டி மாநிலச் செயலாளர் எஸ் ப ஆர் இளங்கோவன் வட்டாரத் தலைவர் வெஸ்டன் முருகன் நகர மன்ற துணைத் தலைவர் தேன்மொழி வட்டாரத் தலைவர் புது ராஜா திருப்பரங்குன்றம் தொகுதி தலைவர் பழனி குமார் எழுமலை பேரூராட்சி தலைவர் கணேசன் மாவட்ட செயலாளர் தவமணி வேல்முருகன் ஜோதி முத்துலட்சுமி மாணிக்கம் ஆகிய காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!