17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பாவூர்சத்திரம் அருகே விதிமுறையை மீறிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு; ஆட்டோ பறிமுதல்..

பாவூர்சத்திரம் அருகே விதிமுறையை மீறிய ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு; ஆட்டோ பறிமுதல்..

எழுதியவர்: mohan April 1, 2022, 10:28 am

பாவூர்சத்திரம் அருகே விதிமுறைகளை மீறி அதிக அளவில் பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி சென்ற ஆட்டோ ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆவுடையானுர் பகுதியில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையிலான பள்ளி குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தது.இதனை தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தலின் பேரில் மேற்படி மோட்டார் வாகன விதிமுறையை மீறி அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றி சென்ற ஆவுடையானூர் ஆட்டோ ஓட்டுனர் ஆத்தியப்பன் (38) மீது மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. உடனடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்ட காவல்துறையினருக்கு பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் தங்களின் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!