17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உசிலம்பட்டி பகுதியில் தக்காளி விளைச்சலிருந்தும் கிலோ ரூ1க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை.

உசிலம்பட்டி பகுதியில் தக்காளி விளைச்சலிருந்தும் கிலோ ரூ1க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் வேதனை.

எழுதியவர்: mohan March 30, 2022, 1:18 pm

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் குறிஞ்சி நகர் செட்டியபட்டி வாசி நகர் கள்ளபட்டி தும்மக்குண்டு மேட்டுப்பட்டி மெய்யணம்பட்டி பெரியசெம்மேட்டுப்பட்டி ஆகிய கிராமப்பகுதிகளில் சுமார் 500க்கும் மேற்பட்ட ஏக்கரில் தக்காளி செடி சாகுபடி செய்துள்ளனர்.தக்காளி நன்கு விளைந்துள்ள நிலையில் விற்பனைக்காக உசிலம்பட்டி காய்கறி சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர்.கடந்த வாரம் வரை விவசாயிகளிடமிருந்து தக்காளி கிலோ ரூ20 முதல் ரூ30வரை கொள்முதல் செய்யப்பட்ட நிலையில் வரத்து அதிகமிருப்பதால் உசிலம்பட்டி காய்கறி சந்தையில் வியாபாரிகள் விவசாயிகளிடமிருந்து 13 கிலோ அடங்கிய தக்காளி பெட்டியை ரூ15 முதல் ரூ20க்கு கொள்முதல் செய்கின்றனா.; கூலி வண்டி வாடகைக்கு கூட விலை இல்லாததால் தக்காளிக்கு உரிய விலை கிடைக்காமல் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.இது குறித்து மாவட்ட நிர்வாகம் தலையிட்டு தக்காளிக்கு உரிய விலை கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டுமென்றும் அரசு சார்பில் தக்காளி பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை தர வேண்டுமென விவசாயிகள் கோரிககை விடுத்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!