17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – சிங்கப்பூர் இடையே 18 மாதத்திற்கு பின் இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை துவக்கம்..

மதுரை – சிங்கப்பூர் இடையே 18 மாதத்திற்கு பின் இன்று முதல் மீண்டும் நேரடி விமான சேவை துவக்கம்..

எழுதியவர்: mohan March 30, 2022, 12:36 pm

கொரோனாபெருந்தொற்றின் காரணமாகசர்வதேச விமான சேவை இந்தியாவிற்கு வந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந் துள்ளதால் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் 27ஆம் தேதி அனைத்து நாடுகளுக்கும் விமான சேவை தொடங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.இந்நிலையில் மதுரையில்இருந்து சிங்கப்பூருக்கு தடை செய்யப்பட்டிருந்த நேரடி விமான சேவை வரும் மார்ச் 29ம் தேதி இன்று முதல் வாரம் இரு நாட்கள், செவ்வாய் மற்றும் சனிகிழமைகளில் இயக்க ஏர் இந்தியா விமானம் முடிவு செய்துள்ளது.இதனை அடுத்து இன்று சிங்கப்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம் இந்திய நேரப்படி மாலை 6.40 மணிக்கு மதுரை வந்தடையும்.மறுமார்க்கமாக மதுரையிலிருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் விமானம், சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும். இத்தகவலை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித் துள்ளன.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!