17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டையில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கவிழா.

நிலக்கோட்டையில் அதிமுக சார்பாக நீர் மோர் பந்தல் துவக்கவிழா.

எழுதியவர்: mohan March 30, 2022, 12:12 pm

முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பங்கேற்புநிலக்கோட்டை, மார்ச்.30- திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நால்ரோடு மற்றும் அம்மையநாயக்கனூர் ஆகிய பேரூராட்சிகளில் அ.தி.மு.க ஒன்றியம் சார்பாக பொதுமக்களுக்கு இலவசமாக நீர் மோர் வழங்கும் விழா நிலக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் யாகப்பன் தலைமையில் நடைபெற்றது. நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் .தேன்மொழி சேகர் , முன்னாள் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் உதயகுமார், மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, அம்மையநாயக்கனூர் பேரூராட்சி செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை பேரூராட்சி செயலாளர் சேகர் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான நத்தம் இரா. விசுவநாதன் கலந்து கொண்டு நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள் மற்றும் நீர் மோர் வழங்கி பேசியதாவது: அதிமுக ஆட்சியில் இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி பொது மக்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை தேவைகளையும் செய்துவருவது தலையாய கடமையாக பணியாற்றி வருகிறோம் என பேசினார். இக்கூட்டத்தில் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு துணைத் தலைவர் சீனிவாசன் , முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மூர்த்தி, மாநில முன்னாள் பொதுக்குழு உறுப்பினர் சரவணகுமார், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரேவதி தங்கப்பாண்டி, கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாலமுருகன், நகரப் பொருளாளர் பூக்கடை சரவணன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு பொறுப்பாளர் புரட்சிமணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!