வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் கிராமத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்ற விழாவில் காட்பாடி தாலுகாவில் உட்பட்ட 10 கூட்டுறவு நிறுவனங்களில் பொது நகை கடன் தள்ளுபடிக்கு தகுதியான மொத்த 322 1 பேருக்குமொத்த தொகையான ரூ 9 கோடியை 14 லட்சத்து 27 ஆயிரத்து 724- தொகையை தள்ளுபடி செய்து நகை வழங்கப்பட்டது.விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கினார்.மாவட்ட கூட்டுறவு இணைப்பதிவாளர் திருகுணஐயப்ப துரை வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு நகையை வழங்கினார்.வேலூர் எம்.பி.கதிர் ஆனந்த், எம்எல்ஏ கார்த்திகேயன், மேயர் சுஜாதா, வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன், பிரம்மபுரம் பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் சம்மந்தப்பட்ட துறையை சார்ந்த அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
காட்பாடியில் நடந்த விழாவில் ரூ 9.14 கோடி மதிப்பிலான நகைக்கான தள்ளுபடியை அமைச்சர் துரைமுருகன் வழங்கினார்.
எழுதியவர்: mohan March 27, 2022, 10:57 am




You must be logged in to post a comment.