17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்டத்தில் 206 காவலர்கள் கவுன்சிலிங் மூலம் பணியிடமாற்றம்..

தென்காசி மாவட்டத்தில் 206 காவலர்கள் கவுன்சிலிங் மூலம் பணியிடமாற்றம்..

எழுதியவர்: mohan March 27, 2022, 10:43 am

தென்காசி மாவட்டத்தில் 206 காவலர்களுக்கு பணியிட மாற்றத்திற்கான கவுன்சிலிங் நடைபெற்றது. தமிழக காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் ஓர் காவல் நிலையத்தில் மூன்று ஆண்டுகள் பணி புரிந்தால் பணியிடமாற்றம் செய்யப்படுவது வழக்கம். இந்நிலையில் தென்காசி மாவட்ட காவல்துறையில் பணிபுரிந்து வரும் காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் அவர்களது குடும்பம், உடல்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு நேரடி கவுன்சிலிங் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தலைமையில் 26.03.2022 நேற்று நடைபெற்றது. இந்த கவுன்சிலிங்கில் 206 காவல் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களுக்கு விருப்பப்படும் காவல் நிலையம் வழங்க ஏற்பாடு செய்யும் விதமாக அமைந்தது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஒரு பணியிட மாற்றத்தால் ஒவ்வொரு காவலர்களின் குடும்பம் மற்றும் குழந்தைகளின் படிப்பு மேலும் உடல்நிலை போன்றவற்றை கருத்தில் கொண்டு கவுன்சிலிங் முறை மூலம் பணியிட மாற்றம் செய்தது மிகவும் பயன்படும் விதமாக அமைந்துள்ளது என காவலர்கள் தெரிவித்ததுடன் மனமார்ந்த நன்றியினையும் தெரிவித்தனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!