17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தனியார் பஞ்சு மில்லில் திடீர் தீவிபத்து.

தனியார் பஞ்சு மில்லில் திடீர் தீவிபத்து.

எழுதியவர்: mohan March 26, 2022, 9:48 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் திருமலை ரோடு பகுதியில் உள்ள சுப்ரமணியன் என்பவருக்கு சொந்தமான எவர்கிரீன் பஞ்சு கழிவு பஞ்சு இந்நிறுவனம் கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.இங்கு கழிவுப் பஞ்சு மூலமாக நூல் தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது.இந்த நிலையில் மில்லில் நேற்று மாலை ஆறு மணி அளவில் திடீரென தீவிபத்து ஏற்பட்டதுதீ விபத்து குறித்து மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகே உள்ள தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் க , ப, பாலமுருகன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை இரண்டு வாகனங்களில் வந்து சுமார் ஒரு மணி நேரத்துக்கு மேலாக போராடி தீயினை அணைத்தனர். துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் மேலும் தீ பரவாமல் தடுக்கப்பட்டது நல்வாய்ப்பாக இதில் எவ்வித காயமும் உயிர்ச் சேதமும் ஏற்படவில்லை இச்சம்பவம் குறித்து மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என தெரியவருகிறது எனினும் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!