17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நேரு யுவகேந்திரா சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டி.

நேரு யுவகேந்திரா சார்பில் பள்ளி மாணவர்களுக்கு போட்டி.

எழுதியவர்: mohan March 25, 2022, 3:23 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த மேல்பெண்ணாத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நேரு யுவகேந்திரா சார்பில் தேசிய வாக்காளர்   தினத்தையொட்டி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  போட்டிகள் நடைபெற்றது நிகழ்விற்கு நேரு யுவகேந்திரா தேசிய தன்னார்வலர் சூர்யா தலைமையில் நடைபெற்றது .பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி அனைவரையும் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கண்ணுப்பிள்ளை முன்னிலை வகித்தார். தேசிய வாக்காளர் தினம் விழிப்புணர்வு போட்டி பேச்சுப் போட்டி கட்டுரைப் போட்டி ஓவியப் போட்டி என பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது அவற்றில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் சான்றிதழ் மற்றும் பங்கேற்ற அனைத்து மாணவர்களுக்கும் பரிசுகள் வழங்கி பாராட்டப்பட்டது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு பணியை நேரு யுவ கேந்திரா தேசிய தன்னார்வலர் சூர்யா, மேல் பெண்ணாத்தூர் சுகாதார ஆய்வாளர் பிரகாஷ் ஆகியோர் மேற்கொண்டனர். பள்ளி ஆசிரியர்கள் சங்கீதா, தனலட்சுமி, நாராயணன் ,அரசு ,மகேஸ்வரி, ராஜா ,ஆறுமுகம் மற்றும் நேரு யுவகேந்திரா பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் முடிவில் ஆசிரியர் வேல்முருகன் நன்றி கூறினார்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!