17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசியில் காணாமல் போன சிறுவனை டெல்லி சென்று மீட்ட காவல் துறை; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

தென்காசியில் காணாமல் போன சிறுவனை டெல்லி சென்று மீட்ட காவல் துறை; தென்காசி மாவட்ட எஸ்.பி பாராட்டு..

எழுதியவர்: mohan March 25, 2022, 11:04 am

தென்காசியில் காணாமல் போன சிறுவனை டெல்லி சென்று மீட்டு வந்த தென்காசி காவல்துறையினருக்கு மாவட்ட எஸ்.பி பாராட்டு தெரிவித்துள்ளார். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரத்தைச் சேர்ந்த மாயகிருஷ்ணன் என்பவரது மகன் புவனேஷ் (17) என்பவர் கடந்த 11.03.2022 அன்று காணாமல் போனது தொடர்பாக தென்காசி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு காணாமல்போன சிறுவனை தேடும் பணி நடந்தது.இந்நிலையில் துணை காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், உதவி காவல் கண்காணிப்பாளர் கிரீஸ் யாதவ் IPS மற்றும் காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் ஆகியோர் சிறுவனின் இன்ஸ்டாகிராம் வலைத்தள பக்கத்தை பின் தொடர்ந்து கண்காணித்து வந்ததில் சிறுவன் இமாச்சலப் பிரதேசம் மணலி சென்றிருப்பதை அறிந்து தொடர் கண்காணிப்பில் சிறுவன் டெல்லியில் இருப்பதை உறுதிசெய்தனர். தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் K.S. பாலமுருகன் டெல்லி விரைந்து சென்று டெல்லி போலீசாரின் உதவியுடன் சிறுவனை கண்டுபிடித்து டெல்லியில் இருந்து சிறுவனை அழைத்து வந்தனர்.பின்பு காவல் அதிகாரிகள் சிறுவனுக்கு அறிவுரைகள் வழங்கி அவரது பெற்றோருடன் சேர்த்து வைத்துள்ளனர். சிறப்பாக செயல்பட்டு டெல்லி சென்று சிறுவனை பத்திரமாக மீட்டு வந்த தென்காசி காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொண்டார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!