17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..

தென்காசி மாவட்ட பகுதிகளில் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்ட இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது..

எழுதியவர்: mohan March 24, 2022, 10:45 am

அடிதடி,கொலை, கொலை முயற்சி போன்ற குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த இரண்டு நபர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுள்ளனர். தென்காசி மாவட்டம், சேர்ந்தமரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட KP அருணாசலபுரம் பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேனை நிறுத்தி அரிவாளை காட்டி பிரச்சனையில் ஈடுபட்டது, கஞ்சா விற்பனை, மற்றும் திருநெல்வேலி மாவட்ட காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் அடிதடி, கொலை, கொலை முயற்சி போன்ற தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டு வந்த பள்ளி கோட்டை கணேசன் என்பவரின் மகன் மாடசாமி (27) மற்றும் சுரண்டை கோட்டை தெருவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் @ மனோஜ்(20) ஆகிய நபர்களை பிரிவு 14 தமிழ்நாடு குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கடையநல்லூர் வட்ட காவல் ஆய்வாளர் விஜயகுமார் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS அறிவுறுத்தியதன் பேரில், மேற்படி நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பரிந்துரையின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவின் பேரில், மேற்படி பள்ளி கோட்டை கணேசன் என்பவரின் மகன் மாடசாமி (27) மற்றும் சுரண்டை கோட்டை தெருவைச் சேர்ந்த மகேந்திரன் என்பவரின் மகன் மனோஜ் குமார் @ மனோஜ்(20) ஆகிய நபர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து தடுப்புக் காவல் உத்தரவு ஆணையை 22.03.2022 அன்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் காவல் ஆய்வாளர் விஜயகுமார் சமர்ப்பித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!