17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது; லாட்டரி சீட்டுகள் பறிமுதல்..

தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்தவர் கைது; லாட்டரி சீட்டுகள் பறிமுதல்..

எழுதியவர்: mohan March 23, 2022, 12:04 pm

அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுக்களை விற்பனை செய்த நபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில்,தென்காசி மாவட்டத்தில் லாட்டரி சீட்டுக்கள் விற்பனையை முற்றிலும் தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சிவகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சிறப்பு சார்பு ஆய்வாளர் நவமணி ரோந்து பணியில் இருந்த போது அங்கு பழனிசாமி (68) என்ற நபர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்வதாக கொடுத்த தகவலின் பேரில் சார்பு ஆய்வாளர் அமிர்தராஜ் அவர்கள் விசாரணை மேற்கொண்டு மேற்படி லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்த சிவகிரி தெற்கு தெருவைச் சேர்ந்த பொய்யா பிள்ளை என்பவரின் மகன் பழனிசாமி(68) மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தார். மேலும் அவரிடமிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூபாய் பத்தாயிரத்து ஐநூறு மதிப்புள்ள லாட்டரிச் சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!