வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் ரயில்பாதையில் வாலிபர் ஒருவர் ரயில் மோதி இறந்து இருப்பதாக காட்பாடி ரயில்வே காவல்துறைக்கு தகவல் கிடைத்தது.ரயில்வே காவல் உதவி ஆய்வாளர் முரளி மனோகர், இறந்த வாலிபரின் பிரேதத்தை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்த வாலிபர் காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பஜனை கோயில்தெருவில் வசித்த கார்க்கி என்பவரின் மகன் அரசு(45) என்று தெரியவந்தது. இவர் சிறியளவில் இசை கச்சேரி நடத்திவந்தார்.நேற்று காலை ரயில்வே பாதையில் சென்றபோது சென்னையிலிருந்து காட்பாடி சென்ற ரயில் மோதி பலியானது தெரியவந்தது.
இறந்த அரசுக்கு மனைவி, ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். இதுகுறித்து காட்பாடி ரயில்வே காவல்துறையினர் விசாரணை செய்துவருகின்றனர்.
காட்பாடி அருகே ரயில் மோதி வாலிபர் உயிரிழப்பு.
எழுதியவர்: mohan March 19, 2022, 11:35 am




You must be logged in to post a comment.