18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டம்;ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு..

தமிழக வாழ்வுரிமை கட்சியின் செயற்குழு கூட்டம்;ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு..

எழுதியவர்: mohan March 19, 2022, 11:24 am

தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தென்காசி மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் புளியங்குடியில் நடந்தது. மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக்கோரியும், ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது. புளியங்குடியில் தென்காசி மேற்கு மாவட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் செயற்குழு கூட்டம் நகர தலைவர் அருணாசலம் தலைமையில் நடந்தது. இதில் தென்காசி மேற்கு மாவட்ட செயலாளர் முகைதீன் கலந்து கொண்டார். கர்நாடக அரசு மேகதாதுவில் தடுப்பணை கட்டுவதை தடுத்து நிறுத்தக் கோரியும், அதற்கு துணைபோகும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் புளியங்குடி காமராஜர் சிலை அருகே 25.03.2022 வெள்ளிக்கிழமை நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் திருப்பூர் சுடலை, மாநில இளைஞரணி தலைவர் ஜெர்ன் குமார்,மாநில ஊடகப்பிரிவு துணை ஒருங்கிணைப்பாளர் நெல்லை த.அ. உமர், மாநில பொதுக்குழு உறுப்பினர் தேனி மணிகண்டன் ஆகியோர்களை கண்டன உரையாற்ற அழைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த செயற்குழு கூட்டத்தில் அனைத்து நகர நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். நகர செயலாளர் இஸ்மாயில் நன்றி கூறினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!