17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » புளியங்குடி பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புகையிலை பொருட்கள் அழிப்பு..

புளியங்குடி பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் புகையிலை பொருட்கள் அழிப்பு..

எழுதியவர்: mohan March 19, 2022, 11:11 am

புளியங்குடி பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் 1 டன் புகையிலைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம், புளியங்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த ஆண்டு காவல் துறையினரால் 1.200 கிலோ கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை அழிப்பதற்காக புளியங்குடி காவல் ஆய்வாளர் ராஜாராம் சிவகிரி நீதிமன்றத்தில் அனுமதி வாங்கியதை தொடர்ந்து புளியங்குடி துணை காவல் கண்காணிப்பாளர் கணேஷ் தலைமையில், புளியங்குடியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கில் நகராட்சி ஊழியர்கள் மற்றும் பொதுவான இரண்டு நபர்களின் முன்னிலையில் 1.200 கிலோ கிராம் புகையிலைப் பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!