18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » சித்தூரில் இருந்து பாளையங்கோட்டைக்கு கடத்த முயன்ற 15 கிலோ கஞ்சா காட்பாடியில் சிக்கியது.

சித்தூரில் இருந்து பாளையங்கோட்டைக்கு கடத்த முயன்ற 15 கிலோ கஞ்சா காட்பாடியில் சிக்கியது.

எழுதியவர்: mohan March 18, 2022, 11:17 am

வேலூர் மாவட்ட போதை பொருள் நுண்ணறிவு பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை போலீசார் நேற்று காட்பாடி அடுத்த கிறிஸ்தியன் பேட்டை செக்போஸ்டில் சித்தூரில் இருந்து வேலூர் நோக்கி வந்த தனியார் பஸ் ஒன்றை நிறுத்தி உள்ளே சென்று ஆய்வு செய்தனர் அப்போது சந்தேகத்தின் பெயரில் 2 பேரை பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் பாளையங்கோட்டையை சேர்ந்த செல்வகுமார் முப்பத்தி ஆறு ராஜமுந்திரி சேர்ந்த ஜெகதீஷ் சாய் 20 என்பது தெரியவந்தது இவர்கள் கஞ்சாவை சித்தூர் பைபாஸில் வைத்து வாங்கியதும் இதை பாளையங்கோட்டைக்கு சென்று விற்பனை செய்ய இருப்பது தெரியவந்தது தொடர்ந்து பஸ் மேற்கூரையில் இரண்டு மூட்டைகளில் இருந்த 15 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து இரண்டு பேரையும் கைது செய்தனர்தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையான காட்பாடி அடுத்த கிறிஸ்தியன் பேட்டை செக்போஸ்டில் தொடர்ந்து ஆந்திர மாநிலத்திலிருந்து கஞ்சா போதைப் பொருட்கள் கடத்தப்பட்டு வருவது வாடிக்கையாகிவிட்டது இதையும் மீறி இந்த செக்போஸ்ட் வழியாக போதைப்பொருள் மற்றும் கஞ்சா கடத்தப்பட்டு தமிழ் காட்பாடி வழியாக வேலூர் வந்து தமிழகத்தின் மற்ற மாவட்டங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு கஞ்சா அமோக விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!