17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தரிசனம்.

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தரிசனம்.

எழுதியவர்: mohan March 18, 2022, 11:09 am

தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் நேற்று மதுரைக்கு வந்தார். அதன்பிறகு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதனை தொடர்ந்து தமிழிசை சௌந்தர்ராஜன் இன்று காலை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வருகை தந்தார். அப்போது தமிழிசைக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பூரண கும்ப மரியாதை தரப்பட்டது. தொடர்ந்து கோவில் யானை ஆசீர்வாதம் வழங்கியது.அதன்பிறகு தமிழிசை மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் சென்று அம்மன் சன்னதியிலும், சுந்தரேஸ்வரர் சந்நிதியிலும் சாமி தரிசனம் செய்தார். சுமார் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் 45 நிமிட நேரம் தரிசனம் செய்த தமிழிசை, அம்மன் சந்நிதி வழியாக கோவிலில் இருந்து வெளியே வந்து விமான நிலையத்துக்கு புறப்பட்டு சென்றார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!