18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மூன்று வயது சிறுவன் உலக சாதனை! சென்னை மேயர் திருமதி “பிரியா ராஜன்” மற்றும் WJUTயின் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் நேரில் அழைத்து வாழ்த்து.

திண்டுக்கல் மூன்று வயது சிறுவன் உலக சாதனை! சென்னை மேயர் திருமதி “பிரியா ராஜன்” மற்றும் WJUTயின் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் நேரில் அழைத்து வாழ்த்து.

எழுதியவர்: mohan March 16, 2022, 12:00 pm

திண்டுக்கல் பேகம்பூரில் வசித்து வரும் கிதர் முகமது-நவ்ரின் தம்பதியினரின் மூன்று வயது மகன் முகம்மது இக்ராம் என்ற சிறுவன் பல்வேறு உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டியும், கார்களின் சின்னங்கள், கம்பெனிகளின் சின்னங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள், பல்வேறு குர்ஆன் வசனங்கள், ஐந்து நிமிடங்கள் தலைகீழாக நிற்பது, ஒற்றைக் கையில் சைக்கிள் ஓட்டுதல், பல நிறங்களையும் பல்வேறு தலைப்புகளையும் தமிழ், ஹிந்தி, ஆங்கிலம், அரபி, ஆகிய நான்கு மொழிகளில் கூறியும், இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை 26.35 செகண்டில் கூறியும் மேலும் இது போன்ற கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மிகவும் பிரமாண்டமான அறிவு திறன் கொண்டு அறிந்து ஒப்புவித்து உலக சாதனை படைத்து “கலாம்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.

இதனையடுத்து சென்னை மேயர் திருமதி பிரியா ராஜன் அவர்கள் சிறுவன் முகம்மது இக்ராமை அழைத்து வாழ்த்துக்கள் கூறியது மட்டும் அல்லாமல் சிறுவனின் தாய் நவ்ரின் தந்தை கிதர் முகமது அவர்களையும் பாராட்டி வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.அதே போன்று தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் மாநிலத் தலைவர் அ.ஜெ.சகாயராஜ் மற்றும் மாநிலப் பொதுச் செயலாளர் பா.பிரதீப்குமார் ஆகியோரும் சிறுவன் முகம்மது இக்ராம் அவர்களை அழைத்து சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் கூறியுள்ளனர்.இது சம்பந்தமாக சிறுவன் முகம்மது இக்ராமின் தாயார் நவ்ரின் கூறியதாவது;பிள்ளைகளை எப்படி வளர்த்தாலும் வளர்ந்து விடுவார்கள் அப்படி அல்லாமல் அவர்களின் திறமைகளை ஆற்றல்களை பெற்றோர் கண்டறிந்து அதன் பக்கம் அவர்களை கொண்டு செல்ல வேண்டும் எனவும்; மதிப்பிற்குரிய சென்னை மேயர் அவர்களின் பாராட்டுதலும் வாழ்த்துக்களும் அதேபோல் “தமிழ்நாடு உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின்” மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் அவர்களின் பாராட்டுதலும் வாழ்த்துக்களும் எனது மகனின் வளர்ச்சிக்கு மென்மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இருப்பதாக சந்தோஷம் அடைந்து கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!