18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 25 ஆண்டுகளை கடந்த வழக்கறிஞர்களுக்கு திருவாடாணை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வாழ்த்தி பாராட்டு விழா. நீதிபதி பங்கேற்பு.

25 ஆண்டுகளை கடந்த வழக்கறிஞர்களுக்கு திருவாடாணை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் வாழ்த்தி பாராட்டு விழா. நீதிபதி பங்கேற்பு.

எழுதியவர்: mohan March 12, 2022, 9:40 am

இராமநாதபுரம் மாவட்டம் திருவாடனை வழக்கறிஞர்கள் சங்கத்தில் உறுப்பினராக இருந்து வழக்கறிஞர்கள் பணியில் 25 ஆண்டுகளை கடந்த மூத்த வழக்கறிஞர்கள் SB கண்ணன்,A. இராஜலிங்கம் இவர்கள் இருவரையும் பாராட்டி வாழ்த்தும் விதமாக திருவாடனை வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விழா நடைபெற்றதுஇதில் மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிபதி மலர் அவர்கள் கலந்துகொண்டு 25 ஆண்டுகளை வழக்கறிஞர் பணியில் சிறப்பாக கடந்த மூத்த வழக்கறிஞர்களைபாராட்டி பேசினார்கள்திருவாடனை வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வழக்கறிஞர் கலந்தர் ஆசிக் கலந்து கொண்டு மூத்த வழக்கறிஞர்களின் சிறப்பான பணிகளை பாராட்டியும் மாவட்ட நீதித்துறை நடுவர்மன்ற நீதிபதி மலர் அவர்களுக்கு சால்வை வழங்கியும் சிறப்புரையாற்றினார்.இந்த நிகழ்வில் மூத்த வழக்கறிஞர் சிவராமன்,திருவாடனை வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் தனபால், செயலாளர் ராம்குமார், வழக்கறிஞர்கள் சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான இளம் வழக்கறிஞர்கள், நீதிமன்ற ஊழியர்கள், காவல் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!