18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம்.

தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம்.

எழுதியவர்: mohan March 11, 2022, 3:40 pm

கால்நடைகள் சுகாதார சிறப்பு விழிப்புணர்வு முகாமில் ஆடு, மாடு, கோழிகள் ,நாய்கள் உள்ளிட்ட கால்நடைகளுக்கான குடற்புழுநீக்குதல், நோய் தடுப்பு மருந்துகள் வழங்கப்பட்டது . சிறப்பு கால்நடை சுகாதார விழிப்புணர்வு முகாமில் 879 கால்நடைகளுக்கு சிகிட்சை அளிக்கப்பட்டது.பசுமாடு வளர்ப்பில் சிறந்த பராமரிப்புக்காக 3மாடுகளுக்கு பரிசுகளும் , மற்றும் கிடாரி கண்றுகள் வளர்ப்பில் சிறந்த 3 பேர் உள்பட மொத்தம் 6 நபர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.மதுரை மாவட்டம் மதுரை கிழக்கு ஒன்றியத்திற்குட்பட்ட காளிகாப்பான் கிராமத்தில் தமிழ்நாடு அரசு, கால்நடை பராமரிப்பு துறை மற்றும் சுகாதார விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.இதில் கால்நடைகளுக்கான மடிஇறங்குதல், கர்ப்பப்பை வெளியேறுதல், மற்றும் நோய் தடுப்புமருந்துகள் , பூச்சி மருந்து, கோடைக்கால நோயான வெட்கை மற்றும் அம்மை நோய்களுக்கு சிறப்பு சிகிட்சையளிக்கப்பட்டது. .கால்நடை பராமரிப்புத்துறை மண்டல உதவி இயக்குனர் என். ஆர். சரவணன் மற்றும் கால்நடை நோய்கள் புலனாய்வு பிரிவு உதவி இயக்குனர் சரவணன் ஆகியோர் கலந்துகொண்டு கால்நடைகளுக்கான சிறப்பு முகாமில் மருந்துகள் ஆலோசனை வழங்கினர். மற்றும் கால்நடை உதவி மருத்துவர்கள் சத்தியபிரியா, பியுலா, கால்நடை ஆய்வாளர்கள் சோணைமுத்து, சாந்தி, கால்நடை உதவியாளர் அழகம்மா ஆகியோர் கால் நடைகளுக்கான நோய் தடுப்பு பரிசோதனைகள் செய்து மாடு, ஆடு, கோழிகள், நாய் உள்பட 879 கால்நடைகளுக்கு மருந்து வழங்கினர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!