17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » செங்கம் மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்.

செங்கம் மின்வாரிய அலுவலகத்தில் முற்றுகை போராட்டம்.

எழுதியவர்: mohan March 11, 2022, 2:58 pm

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் மின்வாரிய அலுவலகத்தில் ஆலப்புத்தூர் கிராமத்தைச் சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்கள் வசிக்கும் பகுதிகளில் மின் இணைப்பு வேண்டியும் , ஆலப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கணவர் பாண்டியன் அராஜக போக்கில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை கண்டித்து முற்றுகை போராட்டம் சிவ பாரதம் இந்துமக்கள் கட்சியின் பாலசுப்பிரமணியன் தலைமையில் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில்ஆலப்புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி அவரது கணவர் பாண்டியன் அராஜகத்தில் ஈடுபட்டு வருகிறார், ஆதிதிராவிட பகுதியில் வாழும் மக்களுக்கு எதிராக பல்வேறு தொல்லைகள் கொடுத்து வந்ததாகவும் அதனை கண்டித்தும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் கல்வி தரம் பாதிக்கப்படாமல் இருக்க உடனடியாக அப்பகுதிக்கு மின் இணைப்பு வழங்க கோரியும் பல்வேறு கோஷங்கள் எழுப்பப்பட்டது. பின்னர், இந்து மக்கள் இயக்கம் பாலசுப்பிரமணியம் தலைமையில் 15 குடும்பங்களுக்கு மின் இணைப்பு ஏற்படுத்த கோரி செங்கம் உதவி செயற்பொறியாளர் இளங்கோவன், இளநிலை பொறியாளர் உதயகுமார், செங்கம் காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோரிடம் மனுவை அளித்தனர் மனுவை பெற்றுக்கொண்ட உதவி செயற்பொறியாளர் உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் ஆர்ப்பாட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர் ஆர்ப்பாட்டத்தில் மக்கள் பாதுகாப்பு இயக்கம் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர் முற்றுகை போராட்டத்தால் சிறிய பரபரப்பு காணப்பட்டது

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!