17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய தந்தை மகன் கைது..

பூட்டிய வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய தந்தை மகன் கைது..

எழுதியவர்: mohan March 11, 2022, 9:50 am

கழுநீர்குளத்தில் வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிய தந்தை மற்றும் மகன் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டனர். தென்காசி மாவட்டம், V.K. புதூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கழுநீர்குளத்தில் வசித்து வரும் இசக்கியம்மாள் என்பவர் வீட்டை பூட்டி விட்டு வெளியே சென்று மீண்டும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் உடைக்கப்பட்டு பீரோவில் இருந்து 24 கிராம் எடை கொண்ட தங்க நகைகள் திருடப்பட்டிருந்தது. இதுகுறித்து இசக்கியம்மாள் V.K புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் சார்பு ஆய்வாளர் அன்னலட்சுமி பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடி அதை உடனே அடகு கடையில் அடகு வைத்து டிவி, செல்போன் போன்றவற்றை வாங்கிய அதே பகுதியை சேர்ந்த ரமேஷ்(47) மற்றும் அவரது மகன் முத்து கனி (25) ஆகிய இரண்டு நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.மேலும் அவர்களிடமிருந்து திருடப்பட்ட தங்க நகைகள் மீட்கப்பட்டது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!