18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திண்டுக்கல் மூன்று வயது சிறுவன். முகம்மது இக்ராம்” கலாம்ஸ் உலக சாதனை.

திண்டுக்கல் மூன்று வயது சிறுவன். முகம்மது இக்ராம்” கலாம்ஸ் உலக சாதனை.

எழுதியவர்: mohan March 10, 2022, 5:53 pm

திண்டுக்கல் பேகம்பூரில் வசித்து வரும் கிதர் முகமது-நவ்ரின் தம்பதியினரின் மூன்று வயது மகன் முகம்மது இக்ராம் என்ற சிறுவன் பல்வேறு உலக நாடுகளின் கொடிகளை அடையாளம் காட்டியும், கார்களின் சின்னங்கள், கம்பெனிகளின் சின்னங்கள், நூற்றுக்கும் மேற்பட்ட கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள், பல்வேறு குர்ஆன் வசனங்கள், ஐந்து நிமிடங்கள் தலைகீழாக நிற்பது, ஒற்றைக் கையில் சைக்கிள் ஓட்டுதல், பல நிறங்களை ஆங்கிலம், தமிழ், ஹிந்தி, அரபி,

போன்ற மொழிகளில் கூறியும், இந்திய நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் அதன் தலைநகரங்களை 26.35 செகண்டில் கூறியும் மேலும் இது போன்ற கிட்டத்தட்ட 80 க்கும் மேற்பட்ட தலைப்புகளில் மிகவும் பிரமாண்டமான முறையில் கண்டறிந்து ஒப்புவித்து உலக சாதனை படைத்து கலாம்ஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளார்.இது சம்பந்தமாக சிறுவன் முகம்மது இக்ராமின் தாயார் நவ்ரின் கூறியதாவது;பிள்ளைகளை எப்படி வளர்த்தாலும் வளர்ந்து விடுவார்கள் அப்படி அல்லாமல் அவர்களின் திறமைகளை ஆற்றல்களை பெற்றோர் கண்டறிந்து அதன் பக்கம் அவர்களை கொண்டு செல்ல வேண்டும் என கூறினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!