18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இளம்பெண் வாலிபர் தூக்கில் தொங்கி தற்கொலை.

இளம்பெண் வாலிபர் தூக்கில் தொங்கி தற்கொலை.

எழுதியவர்: mohan March 5, 2022, 5:12 pm

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கச்சிராயிருப்பு பிரிவு மலைகாலனி தோட்டத்தில் உள்ள அழகுமலை மகன் லோகபிரபு 27.இவரும் துவரிமான் காலனியைச் சேர்ந்த மணிவேலன் மகள் துர்காதேவி25 என்ற பெண்ணும் லோகபிரபு தோட்டத்தில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கினார்கள்.இதுகுறித்து காடுபட்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் பால்ராஜ்,தலைமை காவலர் பாபுகாந்தி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று லோகபிரபு மற்றும் துர்காதேவிஆகிய இருவர் பிணத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்துள்ளனர்.லோபிரபுமும் துர்காதேவிவும் மதுரை தனியார் கல்லூரி படித்தது முதல் காதலித்து வந்ததாகவும்,தற்போது வேலைதேடி வருவதாகவும், வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்ததாகவும்,போலீஸ் விசாரணையில் தெரியவருகிறது..இருவரும் வெவ்வேறு ஜாதி என்பதால் யோகபிரபு வீட்டில் சம்மதம் தெரிவிக்க வில்லையா? கவுரவக் கொலையா ?தற்கொலையா என்று போலீசார் பல்வேறு கோணத்தில் விசாரணை செய்து வருகின்றனர் .இச்சம்பவம் இப்பகுதியில் ஒரே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. சோழவந்தான் இன்ஸ்பெக்டர் சிவபாலன்,தென்கரை வருவாய்அலுவலர் சதீஷ்,மேலக்கால் கிராமநிர்வாக அலுவலர் மாசானம் ஆகியோர் இது குறித்து விசாரணை செய்து வருகிறார்..

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!