18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை தி.மு.க கட்சி கவுன்சிலர்கள் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு.

நிலக்கோட்டை தி.மு.க கட்சி கவுன்சிலர்கள் தலைவர், துணைத் தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்வு.

எழுதியவர்: mohan March 5, 2022, 5:07 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி தலைவர் பதவிக்கு  தி. மு. க கவுன்சிலர் சுபாஷினி பிரியா கதிரேசன் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதேபோன்று நிலக்கோட்டை பேரூராட்சி துணைத்தலைவர் பதவிக்கு திமுக கவுன்சிலர் முருகேசன் போட்டியின்றி ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார். அதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். புதிதாக தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவி ஏற்றுக் கொண்டவர்களை திமுக தெற்கு ஒன்றிய செயலாளர் மணிகண்டன் தலைமையில் திமுகவினர் மற்றும் பொதுமக்கள், உறவினர்களுடன் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!