17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தேசிய அளவிலான எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற மதுரையை சேர்ந்த மாணவிகளுக்கு வரவேற்பு.

தேசிய அளவிலான எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் வென்ற மதுரையை சேர்ந்த மாணவிகளுக்கு வரவேற்பு.

எழுதியவர்: mohan March 4, 2022, 9:32 am

டெல்லியில் நடந்து முடிந்த 43வது தேசிய சீனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் இரண்டாம் இடத்தில் (Runner) வெற்றி பெற்ற மதுரை மாணவிகள் வெற்றிக்கோப்பையுடன் மதுரை ரயில் நிலையத்திற்கு வந்தனர். தொடர்ந்து அவர்களுக்கு ஆசிரியர்கள், பெற்றோர்கள் மதுரை ரயில் நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளித்து வரவேற்றனர்.மதுரை அனுப்பானடி பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11ம் வகுப்பு பயிலும் மதுரை மேலூர் தெற்குத்தெருவை சேர்ந்த RS. மதுமிதா செந்தில்குமார், ஜெ.ஜெருஷா, பி.அமிர்த வர்ஷினி ஆகிய 3 மாணவிகள் கடந்த பிப்ரவரி 27, 28, மார்ச் 1 மற்றும் 2ம் தேதிகளில் டெல்லி மதர் டிவைன் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற 43வது தேசிய அளவிலான சீனியர் எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழ்நாடு அணி சார்பில் மாணவிகள் பங்கேற்றனர்.பயிற்சி ஆசிரியர்களின் வழிகாட்டுதலைப் பின்பற்றி களம் கண்ட தமிழ்நாடு அணி, 25க்கும் மேற்பட்ட அணியினர் பங்கேற்ற தேசிய போட்டியில் 2ம் இடத்தைப் பிடித்து ரன்னராக வெற்றி பெற்றதையடுத்து மதுரை ரயில் நிலையம் வந்த மாணவிகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி, இனிப்புகள் கொடுத்தும் உற்சாக வரவேற்பு அளித்ததுடன் பாராட்டுக்களையும் தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!