திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் முதல்வர் முத்துவேல் கருணாநிதி மு க ஸ்டாலின் 69வது பிறந்த தினத்தை முன்னிட்டு தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சரும், திமுக மாநில துணைப் பொதுச் செயலாளருமான ஐ. பி . பெரியசாமி, திமுக திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளரும், பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ பி செந்தில்குமார் ஆகியோர்களின் ஆலோசனையின்படி நிலக்கோட்டை அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த குழந்தைக்கு ஒரு கிராம் தங்க மோதிரமும், அதேபோன்று நிலக்கோட்டை அருகே உள்ள முருகதூரான்ட்டி புதுவசந்தம் ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு 300 பேருக்கு அசைவ விருந்தும்,ஒரு மாதத்திற்கு தேவையான உணவுகளும் அரிசி, பருப்பு , காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள் திண்டுக்கல் தி.மு.க மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கரிகால பாண்டியன் தனது சொந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது. விழாவிற்கு நிலக்கோட்டை திமுக நகரச் செயலாளர் கதிரேசன் தலைமை தாங்கினார். விழாவில் தங்க மோதிரத்தை வழங்கியும், 300 ஆதரவற்ற மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு திண்டுக்கல் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கரிகால பாண்டியன் பரிமாறினார். இவ்விழாவில் நிலக்கோட்டை பேரூராட்சி கவுன்சிலர்கள் மல்லிகா பால் ரத்தினராஜ், காளிமுத்து, செந்தில்குமார், மற்றும் திமுக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா
நிலக்கோட்டையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா.
எழுதியவர்: mohan March 2, 2022, 12:29 pm




You must be logged in to post a comment.