17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மதுரை – சிங்கப்பூர் மார்ச் 29 முதல் நேரடி விமான சேவை துவக்கம்..

மதுரை – சிங்கப்பூர் மார்ச் 29 முதல் நேரடி விமான சேவை துவக்கம்..

எழுதியவர்: mohan February 28, 2022, 1:40 pm

கெரானா தொற்று எதிரொலியால் கடந்த 2 வருடங்களாக மதுரை – சிங்கபூர் விமான சேவை நிறுத்தப்பட்டது.கொரோனாபெருந்தொற் றின் காரணமாக சர்வதேச விமான சேவை இந்தியாவில் வரும் பிப்.28 வரை தடை செய்யப்பட்டுள்ளது. தற்போது தொற்று பரவல் வேகம் கணிசமாக குறைந் துள்ளதால் மத்திய அரசு சர்வதேச விமான சேவை தடையை நீக்க முடிவு செய்துள்ளது.இந்நிலையில் மது ரையில்இருந்து சிங்கப்பூருக்கு செல்ல தற்காலிகமாக நிறுத்திபட்டிருந்த நேரடி விமான சேவை வரும் மார்ச் 29ம் தேதி முதல் வாரம் இரு நாட்கள், செவ்வாய், மற்றும்சனிகிழமைகளில் இயக்க ஏர் இந்தியா விமான நிறுவனம் முடிவு செய்துள்ளது.இதனை அடுத்து சிங்கபூர் செல்லும் பயணிகளுக்கான முன்பதிவு புக்கிங் தற்பொழுது தொடங்கியுள்ளது,சிங்கப்பூரில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் விமானம் இந்திய நேரப் படி மாலை 6.40 மணிக்கு மதுரை வந்தடையும்.மறு மார்க்கமாக மதுரையிலி ருந்து இரவு 9.35 மணிக்கு புறப்படும் விமானம், சிங்கப்பூர் நேரப்படி அதிகாலை 4.30 மணிக்கு சிங்கப்பூர் சென்றடையும். இத்தகவலை மதுரை விமான நிலைய ஏர் இந்தியா எக்பிரஸ் அலுவலம் சார்பில் தெரிவித் துள்ளனர்…

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!