17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்..

தென்காசி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்..

எழுதியவர்: mohan February 28, 2022, 10:34 am

போலியோ சொட்டு மருந்து தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் போலியோ சொட்டு மருந்து 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள்,அரசு ஆரம்ப,தலைமை சுகாதர நிலையங்கள், அங்கன்வாடி மையங்கள் என பல்வேறு இடங்களில் சொட்டு மருந்து முகாம் அமைக்கப்பட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. அந்த வகையில் தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் பிப். 27 ஞாயிற்றுக் கிழமை போலியோ சொட்டு மருந்து முகாம் நடந்தது. தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மருத்துவர் ஜெஸ்லின் தலைமையில், குழந்தைகள் சிறப்பு பிரிவு தலைமை மருத்துவர் கீதா முன்னிலையில் சொட்டு மருந்து முகாம் நடைபெற்றது. இதில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகள் அனைவருக்கும் போலியோ சொட்டு மருந்து கொடுக்கப்பட்டது. முகாமில் தென்காசி அரசு தலைமை மருத்துவமனை குழந்தைகள் மருத்துவர்கள், மருத்துவர்கள், பயிற்சி மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அனைத்து பணியாளர்களும் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!