17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நேற்று காணாமல் போனவர் இன்று திருப்பரங்குன்றம்தென்கால் கண்மாயில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை.

நேற்று காணாமல் போனவர் இன்று திருப்பரங்குன்றம்தென்கால் கண்மாயில் சடலமாக மீட்பு போலீசார் விசாரணை.

எழுதியவர்: mohan February 27, 2022, 10:25 am

மதுரை பசுமலை தியாகராஜர் தெரு பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (60)., ஓய்வுபெற்ற வேளாண்துறை அதிகாரி. மனைவி தனியார் பொறியியல் கல்லூரியில் துறைத் தலைவராக பணியாற்றி வருகிறார்., மகள் அமெரிக்காவிலும் மற்றும் மகன் சென்னையில் சாப்ட்வேர் இன்ஜினியராக உள்ளனர். இவர் நேற்று மாலை நடைபயிற்ச்சி மேற்கொள்ள 5 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார்.இரவு வெகு நேரம் ஆகியும் வீட்டிற்கு வராததால் அவரது மகன் அரவிந்த் திருப்பரங்குன்றம் காவல் நிலையத்தில் தனது தந்தை காணவில்லை என புகார் அளித்தார். இதனைத் தொடர்ந்து., வழக்கு பதிவு செய்த திருப்பரங்குன்றம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீசாரின் விசாரணையில் இன்று திருப்பரங்குன்றம் பகுதியிலுள்ள தென்கால் கண்மாயில் இறந்த நிலையில் மணிவண்ணனின் உடலை மீட்டனர்.தொடர்ந்து., போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். நடை பயிற்சி மேற்கொண்டு வீடு திரும்பாத ஓய்வு பெற்று வேளாண் துறை அதிகாரியை யாரேனும் கொலை செய்து கண்மாயில் தூக்கி வீசினாரா.? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா.? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!