18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்யப்பட்ட நிலம் மீட்பு..

ஆள்மாறாட்டம் மூலம் மோசடி செய்யப்பட்ட நிலம் மீட்பு..

எழுதியவர்: mohan February 26, 2022, 10:33 am

ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்யப்பட்ட நிலம் நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவின் உதவியுடன் மீட்கப்பட்டது. தென்காசி மாவட்டம், வடக்கு பனவடலிசத்திரம் பகுதியை சேர்ந்த பெண் வள்ளியம்மாள். தனக்கு சொந்தமான 52 சென்ட் இடத்தை சீனிப்பாண்டி மற்றும் வேலுசாமி என்பவர்கள் மோசடி செய்ததாகவும், தனது நிலத்தை மீட்டுத் தரும்படியும் கடந்த 20.01.2022 அன்று தென்காசி மாவட்ட காவல் அலுவலகத்தில் அளிக்கப்பட்ட புகார் மனு அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவுக்கு அனுப்பப்பட்டு காவல் ஆய்வாளர்(ALGSC) சந்தி செல்வி அப்புகார் மனு மீது விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் அபகரிக்கப்பட்ட நிலமானது காளியப்பன் என்பவருக்கு பூர்வீகமாக பாத்தியப்பட்டது எனவே அவருக்குப் பின் அவருடைய வாரிசான அனுராதா வள்ளியம்மாள் என்பவருக்கு பாத்தியப்பட்டது எனவும், சீனிப்பாண்டி என்பவர் காளியப்பன் போல் ஆள்மாறாட்டம் செய்து அவருடைய மருமகனான வேலுச்சாமி என்பவருக்கு போலியான ஆவணம் தயார் செய்து கிரையம் கொடுத்ததும் தெரியவந்தது. பின்பு எதிர் மனுதாரர்கள் மோசடியாக பதிவு செய்த ஆவணங்கள் ரத்து செய்யபட்டு, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது. ஆள்மாறாட்டம் செய்து போலி ஆவணம் தயாரித்து மோசடி செய்யப்பட்ட நிலம் உரிய முறையில் விசாரணை மேற்கொண்டு மீட்டு ஒப்படைத்த நில அபகரிப்பு தடுப்பு சிறப்பு பிரிவில் பணிபுரியும் காவல் அதிகாரிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!