18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வடிவேல்கரை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

வடிவேல்கரை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் மருத்துவ முகாம் நடைபெற்றது.

எழுதியவர்: mohan February 25, 2022, 10:08 am

மதுரை மாவட்டம்திருப்பரங்குன்றம் ஒன்றியத்திற்குட்பட்ட வடிவேல் கரை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.சிறப்பு மருத்துவ முகாமினை சுகாதாரப் பணிகள் துணை இயக்குக்நர் Dr.செந்தில் குமார் உத்திரவின் பேரில் திருப்பரங்குன்றம் வட்டார மருத்துவர் டாக்டர் சிவகுமார் தலைமையில் 12 மருத்துவர்கள், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள், செவிலியர்கள், ஆய்வக பணியாளர்கள், ஊராட்சி பணியாளர்கள் உள்பட.67 பேர் அடங்கிய குழுவினர் முகாமில் மருத்துவ பரிசோதனை செய்தனர்.விழாவில் வடிவேல்கரை ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா முருகன்,துணைத்தலைவர் ராஜேஸ் கண்ணா, மற்றும் ஊராட்சி செயலர் மீனா ஆகியோர் மருத்துவ முகாமிற்கான ஏற்பாடுகள் செய்தனர்.வடிவேல்கரை ஊராட்சி சிறப்பு மருத்துவமுகாமில் பொது மருத்துவம், கண் நோய, புற்றுநோய் , இரத்த அழுத்தம் , நீரிழிவு மகப்பேறு, குழந்தைகள் நலம் ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டது.கலைஞரின் வருமுன் காப்போம் மருத்தவ திட்டத்தின் மூலம் நடைபெற்ற சிறப்பு மருத்து முகாமில் 1017 நோயாளிகள் பயனடைந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!