18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » வைகை ஆற்றில் கலக்கும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீர் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்.

வைகை ஆற்றில் கலக்கும் லட்சக்கணக்கான லிட்டர் கழிவுநீர் கண்டுகொள்ளாத மாநகராட்சி நிர்வாகம்.

எழுதியவர்: mohan February 25, 2022, 9:46 am

மதுரை ஆழ்வார்புரம் வைகையாற்றுப் பகுதியில் ராட்சதக் குழாய் இணைப்பு உடைந்து கழிவுநீர் மொத்தமாக வெளியேறி வருகிறது. அது வைகையாற்றில் கலந்து ஆற்றை அசுத்தமாக்கி துர்நாற்றம் வீசி வருகிறது. நாம் பலமுறை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொடர்புகொண்டு புகார் தெரிவித்தும் இந்தப் பகுதி எனது கண்ட்ரோல் இல்லை, எனது வார்டில் இல்லை என சப்பைக்கட்டு கட்டி சமாளித்து விட்டனர். தற்போது வரையிலும் கழிவுநீர் ஆறாக பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது அதனை மதுரை மாநகராட்சி கண்டுகொள்வதாக இல்லை. வைகை ஆற்றில் கழிவு நீரை கலப்பதை தடுக்க மதுரை மாநகராட்சி ஆணையாளர் நடவடிக்கை எடுப்பாரா???? எதிர்பார்ப்புடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!