17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » தென்னிந்திய நடிகர் சங்கக் புதிய அலுவலகம் திறப்பு விழா.

தென்னிந்திய நடிகர் சங்கக் புதிய அலுவலகம் திறப்பு விழா.

எழுதியவர்: mohan February 17, 2022, 9:29 am

 தென்னிந்திய தமிழ் சினிமா நடிகர்கள் சங்கம் அலுவலகம் காளவாசல் அருகில் பாத்திமா நகர் 1வது தெருவில் மிக மிக கோலாகலமாக திறக்கப்பட்டது. சங்க பொதுச்செயலாளரும், நடிகருமான சி.எம்.வினோத் தலைமையிலும், குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான டாக்டர் ஜெ.விக்டர், தலைவர் அப்துல் ஜப்பார், மீசை தங்கராஜ், செந்தில் ராஜன், தங்கப்பாண்டி ஆகியோர் முன்னிலையிலும் பிதாமகன் அய்யர் பூஜை செய்ய காடுபட்டி மாயக்கா பால் காய்ச்சினார்கள். விழாவில் அப்பா பாலாஜி, சரஷ், கருப்பாயி, நல்லக்கா, கோட்டை கருப்பாயி, வ.மாயக்கா, தங்கா மற்றும் பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை சங்க அலுவலக மேலாளர் பாலா, செய்தித்தொடர்பாளர் செந்தில்நாதன் செய்திருந்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!