17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » பெண்ணின் தொடர்பு எண்ணை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட மர்ம நபர் கைது..

பெண்ணின் தொடர்பு எண்ணை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட மர்ம நபர் கைது..

எழுதியவர்: mohan February 14, 2022, 10:54 am

பெண்ணின் தொடர்பு எண்ணை தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்ட மர்ம நபரை சைபர் கிரைம் காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். தென்காசி மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்த பெண்ணுடைய மொபைல் நம்பரை மர்ம நபர் தவறாக சித்தரித்து முகநூலில் பதிவிட்டுள்ளார். இது குறித்து அப்பெண் தென்காசி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்துள்ளார். அதன் பேரில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுவாமிநாதன்,உதவி காவல் கண்காணிப்பாளர் (பயிற்சி) யாதவ் கிரிஷ் அசோக் IPS ஆகியோர் தலைமையில் காவல் ஆய்வாளர் ஜோஸ்லின் அருள்செல்வி மற்றும் உதவிஆய்வாளர் (தொலை தொடர்பு) செண்பகபிரியா, குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் மாரிமுத்து, தலைமைக் காவலர்கள் கோபி,சீவலமுத்து, அருள் ஆகியோரும், காவலர்கள் முத்துக்குமார், சதீஷ்குமார், பொண்ணரசன் ஆகியோர் அடங்கிய தனிப்படை காவல் துறையினர் விசாரணை செய்து குற்றவாளியான செங்கோட்டையை சேர்ந்த அண்ணாமலை என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.சிறப்பாக செயல்பட்டு குற்றவாளியை கைது செய்த காவல் துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!