17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து ஆவணங்கள் திருட்டு.

மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து ஆவணங்கள் திருட்டு.

எழுதியவர்: mohan February 12, 2022, 11:03 am

மதுரை மாவட்டம் கோவில் பாப்பாகுடி சேர்ந்த விமல் 39 என்பவர் இவர் காளவாசல் பைபாஸ் சாலை அப்பர்னா டவர் எதிரே இவரது காரை நிறுத்தியுள்ளார் நண்பரை பார்க்க சென்றுள்ளார் வெள்ளிக்கிழமை என்பதால் பைபாஸ் சாலையில் வாரச்சந்தை பொதுமக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது அரை மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது இவரது கார் பின்புறம் இடதுபுற கண்ணாடி உடைக்கப்பட்டது இதைக்கண்டு அதிர்ந்து போன விமல் உடைக்கப்பட்ட காரிலிருந்து ஒரு பை வைத்திருந்தார் அந்த பையில் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியின் செக் புக் 1 மற்றும் நகை அடகு வைத்த ரசீது ஆகியவை திருடு போயுள்ளது தெரியவந்தது இதனைத்தொடர்ந்து விமல் மதுரை எஸ் எஸ் காலனி போலீசாருக்கு தகவல் கொடுத்தார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஸ் எஸ் காலனி போலீசார் இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர் நேற்று வெள்ளிக்கிழமை வாரச்சந்தை என்பதால் மக்கள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது கூட்டம் அதிக அளவில் மக்கள் நடமாடும் பகுதியில் கார் கண்ணாடியை உடைத்து திருடி இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!