17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கபாடி போட்டியில், விவேகானந்தா பள்ளி மாணவர்கள் சாதனை.

கபாடி போட்டியில், விவேகானந்தா பள்ளி மாணவர்கள் சாதனை.

எழுதியவர்: mohan February 12, 2022, 10:59 am

நேரு யுவகேந்திரா, மதுரை மாவட்ட அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வாடிப்பட்டி அரசு மேனிலைப்பள்ளியில் நடைபெற்றது. 10 பள்ளிகள் பங்கு பெற்றன. இதில், சோழவந்தான் விவேகானந்த மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்துகொண்டு கபாடி விளையாட்டு போட்டியில்,மாவட்ட அளவில் முதல் பரிசை பெற்றனர்.கோபிகா என்ற மாணவி, நீளம் தாண்டுதலில் இரண்டாம் பரிசையும்,  கார்த்திக் என்ற மாணவன் 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் மூன்றாம் பரிசையும் பெற்றனர்.பரிசு பெற்ற மாணவர்களை பள்ளியின் செயலர் சுவாமி வேதானந்த,  பள்ளியின் முதல்வர்கார்த்திகேயன், உடற்பயிற்சி ஆசிரியர்மாணிக்கம், ஆசிரியர்கள், ஆசிரியரல்லாத பணியாளர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அனைவரும் பாராட்டினர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!