மதுரை மாவட்டம் உசிலம்பட்டிப் பகுதியிலுள்ள கிராமங்களில் உள்ள கோவில்களில் மாசி மாதம் மகாசிவராத்திரியன்று திருவிழா நடைபெறும்.இந்தக் குலதெய்வ வழிபாட்டுடன் கூடிய திருவிழாவிற்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோர் கூடுவர்.இதில் சில கிராமங்களில் உள்ள கோவில்களில் பூசாரி தேர்வில்
பிரச்சனை ஏற்படுவதால் உசிலம்பட்டியில் அரசு அதிகாரிகள் முன்னிலையில் சமாதானக் கூட்டம் நடைபெற்று பிரச்சனைகளை தீhத்துக் கொன்வது வழக்கம்.இந்நிலையில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருமாத்தூர் பொன்னாங்கன் கோவிலில் யார் பூசாரி என்பதில் இரு தரப்பினருக்கிடையே பிரச்சனை ஏற்ப்பட்டதால் உசிலம்பட்டி வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் விஜயலட்சுமி தலைமையில் சமாதானக்கூட்டம் இன்று நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.இதற்காக கிராமமக்கள் காலை 10 மணிக்கே வட்டாச்சியர் அலுவலகம் வந்திருந்த நிலையில் வட்டாச்சியர் தேர்தல் பணி காரணமாக வெளியில் சென்று விட்டதால் மாலை 3 மணி வரை அதிகாரிகள் யாரும் சமாதானக்கூட்டத்திற்கு அழைக்கவில்லைஇதனால் ஆத்திரமடைந்த கருமாத்தூர் கிராம மக்கள் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.இதனால் அங்கு பரபரப்பு நிலவியது.அதிகாரிகள் தலையிட்டு பேச்சுவார்த்தை நடத்திய பின் கலைந்து சென்றனர்.
கோவில் திருவிழா தொடர்பான பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் அழைக்காததால் ஆத்திரமடைந்த கிராமமக்கள் வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகை
எழுதியவர்: mohan February 11, 2022, 4:07 pm




You must be logged in to post a comment.