17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » கீழக்கரை செய்திகள் » மாநில செய்திகள் » மும்பை மாராத்தான் ஓட்டத்தில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த காவல்துறை துணை ஆணையர்…

மும்பை மாராத்தான் ஓட்டத்தில் பதக்கம் வென்ற தமிழகத்தைச் சார்ந்த காவல்துறை துணை ஆணையர்…

எழுதியவர்: ஆசிரியர் January 25, 2018, 1:24 pm

உலககின் டாப் 10 மாராத்தான் போட்டிகளில் ஒன்றாகக் கருதப்படும் மும்பை மராத்தான் போட்டி ஆகும். 2018ம் ஆண்டுக்கான போட்டி கடந்த 21.01.2018 அன்று மும்பையில் நடைபெற்றது.

இப்போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுமார் 30 ஆயிரம் வீரர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் இருந்து கோவை மாநகரக் காவல்துறை துணை ஆணையர் (தலைமையிடம்) தர்மராஜன் IPS, முதல் முறையாக கலந்து கொண்டு, நிர்ணயிக்கப்பட்ட தொலைவை வெறும் 5 மணிநேரம் 13 நிமிடத்தில் கடந்து சாதனை படைத்துள்ளார்.

இந்த மாராத்தான் ஓட்டத்தில் 42 கி.மீ என்ற இலக்கை 7 மணி நேரத்தில் கடந்தால் மட்டுமே பதக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. பதக்கம் வென்ற காவல் துணை ஆணையரை கோவை மாநகர ஆணையர் பெரியய்யா IPS, மற்றும் சக அதிகாரிகள் வெகுவாக பாராட்டினார்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!