திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள கனந்தம்பூண்டி பகுதியில் அரசு மதுபான கிடங்கு இருந்து வருகிறது. இங்கிருந்து திருவண்ணாமலை மற்றும் பல்வேறு தாலுகாவிற்கு மதுபாட்டில்கள் லாரிகள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறதுகடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு மதுபான கடைகளுக்கு லாரிகளை அனுப்ப முயன்ற போது லாரியின் பின்புறம் தார்பாய் கிழிக்கப்பட்டு அதில் மது பாட்டில் வைக்கப்பட்ட சுமார் ஏழு பாக்ஸ்கள் திருடப்பட்டு இருந்தது அதிகாரிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்ததுஇந்த நிலையில் அரசு மதுபான மேலாளர் செந்தில்குமார் தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் மர்ம நபர்கள் மது பாட்டில்களை திருடிச் சென்றதாக புகார் கொடுத்தார் புகாரின் அடிப்படையில் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பவன் குமார் ரெட்டி அவர்களின் உத்தரவின் பேரில் காவல் ஆய்வாளர் தனலட்சுமி உதவி ஆய்வாளர் கிருபானந்தம் ஆகியோர் தலைமையில் போலீசார் தீவிரமாக மதுபான பாட்டில்களை திருடிய நபரை தேடி வந்தனர் அப்போது கீழ் செட்டிப்பட்டு பகுதியைச் சேர்ந்த சுதாகர் நல்லவன்பாளையம் பகுதியைச் சேர்ந்த லட்சுமணன் ஆகியோர் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது அவர்களை இருவரையும் சுற்றி வளைத்த போலீசார் இருவரையும் கைது செய்து அவர்கள் மறைத்து வைத்திருந்த சுமார் 50 ஆயிரம் மதிப்பிலான 7 அரசு மதுபான பெட்டிகளை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர் அரசு மதுபான கடைக்கு லாரிகளில் அனுப்பப்படும் அரசு மதுபான பாதுகாப்பற்ற முறையில் இருந்து வருவதால் மறுப்பவர்கள் சர்வசாதாரணமாக அரசு மதுபான பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றது வழக்கமாக இருந்து வருவதாகவும் கண்காணிப்பு கேமரா பொருத்தி பாதுகாக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் அப்பகுதி மது பிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
செங்கம் அருகே நெடுஞ்சாலை பட பாணியில் லாரியின் தார்பாய் கிழித்து ரூ. 50 ஆயிரம் மதிப்பில் மதுபாட்டில்கள் திருட்டு : இருவர் கைது.
எழுதியவர்: mohan February 11, 2022, 2:11 pm




You must be logged in to post a comment.