18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » இலஞ்சி பள்ளியில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு..

இலஞ்சி பள்ளியில் பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு..

எழுதியவர்: mohan February 11, 2022, 11:35 am

தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து தொடர் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இலஞ்சி பள்ளி மாணவ மாணவிகளிடையே, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிருஷ்ணராஜ் IPS உத்தரவின் பேரில் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்கள், தனியார் நிறுவனங்கள், பள்ளி கல்லூரிகளுக்கு காவல் துறையினர் நேரில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு(IUCAW) கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராஜேந்திரன் அறிவுறுத்தலின் பேரில், தென்காசி மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக் கெதிரான குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் அன்னலட்சுமி மற்றும் சார்பு ஆய்வாளர் இரத்தின பால் சாந்தி ஆகியோர் இலஞ்சியிலுள்ள பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளிடம், தங்களுக்கு பள்ளியிலோ, வெளியிலோ எந்த பிரச்சனை ஏற்பட்டாலும் உடனடியாக பெற்றோர்களிடமும் ஆசிரியர்களிடமும் தெரிவிக்க வேண்டும் எனவும், முன்பின் தெரியாத நபர்களிடம் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பேச வேண்டாம் எனவும், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் நடைபெற்றால் புகார் அளிக்கும் தொடர்பு எண்கள் (1098,181,14417,155260) மற்றும் ஆபத்து நேரத்தில் காவல் துறையினரின் உதவியை பெற உதவும் காவலன் செயலி குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!