17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்; 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்கு பதிவு..

கடையநல்லூரில் தடையை மீறி ஆர்ப்பாட்டம்; 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்கு பதிவு..

எழுதியவர்: mohan February 11, 2022, 11:00 am

கர்நாடகா கல்லூரியில் ஹிஜாப் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் குறித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ஹிஜாப் அணிய தடை செய்ததை கண்டித்து தமிழகத்திலும் பல்வேறு அமைப்புகள், அரசியல் கட்சிகள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் கர்நாடகாவில் ஹிஜாப் அணிய தடை செய்ததை கண்டித்து கடையநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 800 பெண்கள் உட்பட 900 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. கர்நாடகத்தில் கல்லூரி மாணவிகள் ஹிஜாப் அணிய தடை செய்ததை கண்டித்து தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தமிழ்நாடு தவ்ஹீத் அமைப்பினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்ட நிலையில், தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்திய மாவட்ட தலைவர் அப்துல் ஸலாம், மாவட்ட செயலாளர் அப்துல் பாசித், பொருளாளர் ஜலாலுதீன், துணைத் தலைவர் மசூது சாகிப், துணை செயலாளர்கள், ஹாஜா, பீர்முகமது, அஹ்மது, அன்வர் சாதிக், தொண்டரணி செயலாளர் புகாரி, இதற்கான ஏற்பாடுகளை செய்து கடையநல்லூர் அனைத்து கிளை நிர்வாகிகள் சாகுல்ஹமீது, ஹசன், பாதுஷா, நிரஞ்சர்ஒலி, பாருக், சேகனா, குல்லி அலி, 800 பெண்கள் உட்பட 900 நபர்கள் மீது கடையநல்லூர் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப் பதிவு செய்தார்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!