17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » திமுக தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரின் கார் கண்ணடியை உடைப்பு,

திமுக தெற்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளரின் கார் கண்ணடியை உடைப்பு,

எழுதியவர்: mohan February 10, 2022, 10:51 am

மதுரை தெற்கு மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளராக இருப்பவர் பாச பிரபு, இவருடைய தந்தை சந்திரன் வீரகனூர் ஊராட்சி மன்ற தலைவராக உள்ளார். இவர் வீரகனூர் அருகிலுள்ள மகாராஜன் நகரில் வசித்து வருகின்றார். இந்த நிலையில் பாச பிரபுவை இதே பகுதியை சேர்ந்த தங்கராஜ் மற்றும் அவரது தந்தை வைத்தியநாதன் மற்றும் அதிமுக முன்னாள் எம் எல் ஏ தமிழரசனின் மருமகனுமான வெற்றிவேல் உட்பட 15 பேர் நேற்று முன் தினம் இரவு பாச பிரபு வீட்டின் முன்பு வந்து தகராறு செய்து அவரை தாக்க முயற்சி செய்து காரில் கல்லை தூக்கி போட்டு கார் கண்ணாடியை உடைத்து வெறிச்செயலில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து பாச பிரபு சிலைமான போலீசில் புகார் அளித்ததை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திமுக நிர்வாகியின் கார் கண்ணாடியை உடைத்த சம்பவம் இப்பகுதியில பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!