17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என சொல்லி வசூல் வேட்டையில் ஈடுபடும் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி.

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி என சொல்லி வசூல் வேட்டையில் ஈடுபடும் போலி உணவு பாதுகாப்பு அதிகாரி.

எழுதியவர்: mohan February 9, 2022, 10:34 am

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகில் உள்ள கூத்தியார்குண்டு பகுதியில் உள்ள பெட்டி கடையில் ஆய்வு செய்வதாகவும் தன்னை உணவு பாதுகாப்பு துறை அலுவலர் எனவும் அறிமுகம் செய்து கொண்டு தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்வதாகவும் மாதம் தோறும் 5 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் இல்லையெனில் கடையை சீல் வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மிரட்டல் விடுத்து 1000 ரூபாய் பணம் பெற்றுக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இது குறித்து இப்பகுதியில் உள்ள பெட்டி கடைக்காரர்கள் கூறுகையில் அடிக்கடி இது போன்று தனக்கன்குளம், நாகமலை புதுக்கோட்டை உள்ளிட்ட இடங்களில் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்பு துறை எனக்கூறி வசூல் வேட்டையில் ஈடுபடுவதாக கூறினர். மேலும் மதுரையில் தலைமை உணவு பாதுகாப்பு அதிகாரிக்கு பணம் கொண்டு சேர்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார் இது போன்ற போலி சங்கங்கள் மற்றும் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் என வசூல் வேட்டையில் ஈடுபடுவது காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக உள்ளது சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமா உணவு பாதுகாப்பு அதிகாரிகள் பெயரை பயன்படுத்துபவர்கள் மீது காவல்துறையில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் புகார் கொடுத்து சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பார்களா.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!