17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » உயர் மின் அழுத்தம் செல்லும் மலைப் பகுதியில் திடீர் தீ விபத்து

உயர் மின் அழுத்தம் செல்லும் மலைப் பகுதியில் திடீர் தீ விபத்து

எழுதியவர்: mohan February 7, 2022, 7:37 pm

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பசுமலை அருகில் விளாச்சேரி செல்லும் வழியில் உள்ளது குவாலி மலை. இந்த மலையை ஒட்டிய பகுதியில் அரசு இசைக்கல்லூரி, மற்றும் மின்சார உயர் மின்னழுத்த கோபுரம் அமைந்துள்ளது. வனத்துறை நாற்றங்கால் பண்ணை ஆகியன உள்ளன. இதன் மேல் பகுதியில் உள்ள புல்வெளி பகுதியில் நேற்று மாலை திடீரென தீப்பற்றி எரிந்தது. இதனைத்தொடர்ந்து வனத்துறை அலுவலர் சோபியா மதுரை டவுன் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த திடீர் நகர் தீயணைப்பு துறையினர், திருப்பரங்குன்றம் போலீசார் போராடி தீயை அனைத்தனர். திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!