மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா வில்லாபுரம் மீனாட்சி நகர் துளசிராம் தெரு, சௌடேஸ்வரி அம்மன் கோவில் தெரு, குமரன் தெரு, மாடன் தெரு ஆகிய பகுதிகளில் சாக்கடை நீர் செல்லாமல் சாலைகளில் தேங்கி
பொதுமக்கள் மிகவும் அவதிப்படுகின்றனர். சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று ஏற்படும் அவல நிலை உள்ளது. இது குறித்து மதுரை மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் இன்று காலை சாலைகளில் கருப்புக் கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தினர்.90 வது வார்டு பகுதியில் சாக்கடை சாலை வசதி செய்தால் மட்டுமே வாக்களிப்போம் என பொதுமக்கள் அறிவித்துள்ளனர். மாநகராட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் பொதுமக்கள் அறிவிப்பால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மீனாட்சி நகர் – பொதுமக்கள் அடிப்படை வசதி செய்து தரக்கோரி கருப்பு கொடி கட்டி தேர்தல் புறக்கணிப்பு போராட்டம்.
எழுதியவர்: mohan February 7, 2022, 11:40 am




You must be logged in to post a comment.