17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நீட் விலக்கு மசோதாவை பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து மதுரை ரயில் நிலையத்தை முற்றுகை.

நீட் விலக்கு மசோதாவை பேரவைத் தலைவருக்கு திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்து மதுரை ரயில் நிலையத்தை முற்றுகை.

எழுதியவர்: mohan February 5, 2022, 9:54 am

2022-ல் தமிழக சட்டப் பேரவையில் நீட் விலக்கு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆளுநர் அதனை சட்டப்பேரவை தலைவருக்கு மீண்டும் அனுப்பியுள்ளத்தை கண்டித்து தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர். மேலும் நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் திருப்பி அனுப்பியதைக் கண்டித்து மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர். விவாதத்துக்கு அவைத் தலைவர் அனுமதியளிக்காத நிலையில் அவையில் இருந்து அவர்கள் வெளிநடப்பு செய்தனர்.மேலும் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் நீட் விலக்கு மசோதாவை திருப்பி அனுப்பிய ஆளுநரை கண்டித்தும், மத்திய அரசு ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி மதுரை ரயில் நிலையத்தை நோக்கி பேரணியாக வந்து முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.அதனைத் தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!