18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » தி.மு.க. மாவட்ட செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு;10 பேர் மீது வழக்குப்பதிவு..

தி.மு.க. மாவட்ட செயலாளர் கார் கண்ணாடி உடைப்பு;10 பேர் மீது வழக்குப்பதிவு..

எழுதியவர்: mohan February 1, 2022, 1:21 pm

தென்காசி அருகே தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவபத்மநாபன் கார் கண்ணாடி உடைக்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகிறார்கள். தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்தவர் ராஜதுரை. இவர் தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளராக உள்ளார். இவரது உறவினருக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட கட்சியில் வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ராஜதுரை தனது உறவினருக்கு உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட சீட் வழங்க வேண்டும் என கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது தென்காசி அருகே இருந்து சிவபத்மநாபன் காரில் கிளம்ப முயன்ற போது, ராஜதுரை அருகில் இருந்த குப்பை தொட்டியை தூக்கி காரில் எறிந்தார். இதில் கார் கண்ணாடி நொறுங்கி அதன் துகள்கள் சிவபத்மநாபன், அவரது உதவியாளர் சுரேஷ் கண்ணன் ஆகியோர் மீது விழுந்தது. இதற்கிடையே சுரேஷ் தாக்கப்பட்டார். இதில் படுகாயமடைந்த அவர் சிகிச்சைக்காக தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சுரேஷ் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் இலத்தூர் போலீசார், ராஜதுரை உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!