17 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » 500 ரூபா கொடும்யா ரசீதெல்லாம் போட்டிருக்கு” கிராம நிர்வாக அதிகாரி முதியவரிடம் பணம் கேட்கும் வீடியோ வைரல்..

500 ரூபா கொடும்யா ரசீதெல்லாம் போட்டிருக்கு” கிராம நிர்வாக அதிகாரி முதியவரிடம் பணம் கேட்கும் வீடியோ வைரல்..

எழுதியவர்: mohan February 1, 2022, 1:13 pm

விவசாய மின் இணைப்பு பெற கையொப்பமிடுவதற்கு கிராம நிர்வாக அதிகாரி முதியவரிடம் பணம் கேட்கும் வீடியோ சமூக வலை தளங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் வெள்ளக்கால் கிராம நிர்வாக அதிகாரி, விவசாய மின் இணைப்புக்கான ஆவணங்களில் கையொப்பமிட, முதியவரிடம் பணம் கேட்கும் காட்சி வீடியோவில் பதிவாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில் கிராம நிர்வாக அதிகாரி மணி என்ற முதியவரிடம் “500 ரூபா கொடும்யா” “ரசீதெல்லாம் போட்டிருக்கு” “எவ்வளவு வேல இருக்கு” 200 ரூபாயாவது கொடும் என்பதாக பணம் கேட்கும் காட்சி மக்களை முகம் சுழிக்க வைத்துள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மக்களுக்காக சேவையாற்றும் அலுவலர்களே மக்களிடம் தவறான முறையில் பணம் கேட்கும் இது போன்ற நிலைகள் மாற்றப்பட வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர் அபுபக்கர்சித்திக்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!