18 February 2026 சென்னை, தமிழ்நாடு
www.keelainews.in
சத்தியப்பாதை - TN/TAM/2005/17836
Banner
முகப்பு » செய்திகள் » மாவட்ட செய்திகள் » நிலக்கோட்டை பேரூராட்சியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்

நிலக்கோட்டை பேரூராட்சியில் அனைத்து கட்சி நிர்வாகிகள் கூட்டம்

எழுதியவர்: mohan February 1, 2022, 12:37 pm

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை பேரூராட்சி அலுவலகத்தில்  பேரூராட்சி செயல் அலுவலர் சுந்தரி தலைமையில் அனைத்து கட்சி நிர்வாகிகள் பேரூராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் குறித்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர் சடகோபி முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அனைத்துக் கட்சி நிர்வாகிகளும் தற்போது நடைபெறும் வேட்பு மனு தாக்கலின் போது வேட்பாளர் , மற்றும் ஒருவர் உடன் தான் வேட்புமனு தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி முறையாக கட்சி நிர்வாகிகளும் ஒத்துழைப்பு நல்குமாறு பயன்படுத்தப்பட்டது. தற்போது கொரானாவின் தாக்கம் அதிகரிக்க கூடாது என்பதற்காக அரசு ஏற்கனவே விதித்துள்ள சமூக இடைவெளி மற்றும் முக கவசம் அணிந்து வர வலியுறுத்தியும் ஆலோசனை வழங்கப்பட்டது. அதேபோன்று தேர்தல் நடைபெறும் முன்பு சட்ட ஒழுங்கு பிரச்சனை நடைபெறா வண்ணம் அரசியல் பிரமுகர்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பும் , தகவல் தெரிவிக்குமாறு போலீஸ் தரப்பிலிருந்து வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் போலீஸ் இன்ஸ்பெக்டர் குரு வெங்கட்ராஜ், திமுக நகர செயலாளர் கதிரேசன், அதிமுக மாவட்ட தகவல் தொழில்நுட்ப துணைச் செயலாளர் வெங்கடேசன், மதிமுக ஒன்றிய செயலாளர் ராஜா, பாரதிய ஜனதா கட்சி தொழிற்சங்க பிரிவு மாவட்டத் துணைச் செயலாளர் ரவிச்சந்திரன்,  காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் நடராஜன், தேமுதிக ஒன்றிய செயலாளர் வெள்ளைச்சாமி, நாம் தமிழர் கட்சி நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதி தலைவர் சங்கிலிபாண்டியன், மற்றும் பல்வேறு கட்சியினர் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!